ஒரே ஒரு ஃபோட்டோ தான்.. மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்த குஷ்பு!1815870642
ஒரே ஒரு ஃபோட்டோ தான்.. மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்த குஷ்பு! நடிகை குஷ்புவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். பலரும் ஏன் இந்த திடீர் மாற்றம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பான்-இந்தியா ஸ்டார் நடிகைகள் லிஸ்டில் குஷ்புவும் இருக்கிறார். தனது அழகு, திறமை, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர். எந்த நடிகைக்கும் கட்டாத அளவுக்கு குஷ்புவுக்கு மட்டும் தான் கோவில் கட்டியிருக்கின்றனர் ரசிகர்கள். தொழில் முனைவர், தயாரிப்பாளர், சீரியல் நடிகை என்று பல வித அவதாரங்களை எடுத்த குஷ்பு தற்போது கதாசிரியர். கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் மீரா சீரியலை குஷ்புவே எழுதி மற்றும் நடித்து வருகிறார். சீரியலும் டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கைப் பெற்று பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா? இரண்டு தலைமுறை நடிகர்களோடு நடித்து, இன்னும் மூன்றாவது தலைமுறை நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பு சினிமா, அரசியல் இரண்டிலும் பிஸியோ பிஸி. அதே போல சின்னத்திரையிலும் தன...