தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்.. பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!19444119
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்.. பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..! பண்டிகையை ஒட்டி, உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதே போல, சென்னை பிராட்வே டான் போஸ்கோ பள்ளியிலும் கோவை ஜமாத் மஸ்ஜித் மசூதியிலும் சேலம் சூரமங்கலம் பகுதியிலும் நாகர்கோவில் அடுத்த இளங்கடை பாபா ஹாசிம் பள்ளிவாசல் மைதானத்திலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. புதுச்சேரி கடற்கரை சாலையிலும் காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்ற நிலையில், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்துடன் தொழுகையில் பங்கேற்றனர்.