பூதமாக பிரபுதேவா குழந்தைகளை மகிழ்வித்தாரா? மை டியர் பூதம் விமர்சனம்! 811044128
பூதமாக பிரபுதேவா குழந்தைகளை மகிழ்வித்தாரா? மை டியர் பூதம் விமர்சனம்! அதே அலாவுதீன் பாணி திரைப்படம் தான் இந்த மை டியர் பூதம். முனிவரிடம் மகன் பெற்ற சாபத்தை அப்பா பூதமான கர்க்கிமுகி (பிரபுதேவா) வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார். அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (சூப்பர் டீலக்ஸ் புகழ் மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும், அதை திருநாவுக்கரசு செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. மைடியர் பூதம் திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை டார்கெட் செய்தே உருவாக்கப்பட்டது. அதிலும், 10 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் இந்த படத்தை தாராளமாக என்ஜாய் பண்ணுவார்கள். மற்றபடி பெரியவர்களை கனெக்ட் செய்ய இயக்குநர் திரைக்கதையில் சில இடங்களில் முயற்சித்துள்ளார். ஆனால், அது அவ்வளவாக கனெக்ட் ஆகவில்லை என்பது மை டியர் பூதம் படத்துக்கு பின்னடைவாக மாறி உள்ளது. தன்னுடைய பூத லோகத்தில் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் கர்க்கிமுகி பூதம் மகன் கண்ணாமூச்சி...