94 யூடியூப் சேனல், 19 சமூக ஊடக கணக்கு, 747 யுஆர்எல்-கள் முடக்கம்!686857400
94 யூடியூப் சேனல், 19 சமூக ஊடக கணக்கு, 747 யுஆர்எல்-கள் முடக்கம்! Fake News Alert: 2021-22 ஆம் ஆண்டில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசாங்கம் தடை செய்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இதனுடன், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 URL-களும் தடை செய்யப்பட்டுள்ளன. ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் பிரிவு 69A இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்பி பிரசாரம் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். கோவிட்-19 தொடர்பான போலிச் செய்திகளைச் சரிபார்க்க, பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு மார்ச் 31, 2020 அன்று உருவாக்கப்பட்டது என்று தாக்கூர் கூறினார். இந்த யூனிட் கோவிட்-19 தொடர்பான கேள்விகள் உட்பட மொத்தம் 34,125 கேள்விகளை செயலாக்கியது. PIB தனது சமூக ஊடக தளங்களில் போலி செய்திகள் ம...