94 யூடியூப் சேனல், 19 சமூக ஊடக கணக்கு, 747 யுஆர்எல்-கள் முடக்கம்!686857400
94 யூடியூப் சேனல், 19 சமூக ஊடக கணக்கு, 747 யுஆர்எல்-கள் முடக்கம்!
Fake News Alert: 2021-22 ஆம் ஆண்டில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசாங்கம் தடை செய்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இதனுடன், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 URL-களும் தடை செய்யப்பட்டுள்ளன. ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் பிரிவு 69A இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்பி பிரசாரம் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். கோவிட்-19 தொடர்பான போலிச் செய்திகளைச் சரிபார்க்க, பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு மார்ச் 31, 2020 அன்று உருவாக்கப்பட்டது என்று தாக்கூர் கூறினார். இந்த யூனிட் கோவிட்-19 தொடர்பான கேள்விகள் உட்பட மொத்தம் 34,125 கேள்விகளை செயலாக்கியது. PIB தனது சமூக ஊடக தளங்களில் போலி செய்திகள் மற்றும் 875 இடுகைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
ராஜ்யசபாவில் பேசும் போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தை மேற்கோள்காட்டி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு பதிலாக ஜிஎஸ்டி கவுன்சிலில் எழுப்பியிருக்க வேண்டும் என்றார். பிஜேபி ஆட்சி செய்யாத மாநில அரசுகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள் கலந்துக்கொள்கிறார்கள். அங்கு ஜிஎஸ்டி குறித்து தங்கள் பிரச்சினைகளை எழுப்பவில்லை. ஆனால் இங்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்கவும், பலகைகளை காட்டவும் வருகிறார்கள்.
அதேபோல கொரோனா தடுப்பூசி மற்றும் அக்னிபத் திட்டம் தொடர்பாக சில எதிர்க்கட்சி தலைவர்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை பரப்புவதாக அவர் விமர்சித்தார். இருப்பினும், நாட்டில் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
சில தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி, கொரோனா தடுப்பூசி மற்றும் ஆயுதப்படைகளில் ஆட்சேர்ப்புக்கான அக்னிபத் திட்டம் குறித்து பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார். எதிர்கட்சிகள் போலியான பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். அதேநேரத்தில் ஊடகங்கள் இவ்வாறான செயல்பாடுகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Comments
Post a Comment