ராய் லக்‌ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி.. வாடிவாசல் பாட்டு எப்படி இருக்கு?


ராய் லக்‌ஷ்மியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி.. வாடிவாசல் பாட்டு எப்படி இருக்கு?


தி லெஜண்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான வாடிவாசல் வாடி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சினேகன் வரிகளில் பென்னி தயாள் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். லெஜண்ட் சரவணன் மற்றும் ராய் லக்‌ஷ்மி இணைந்து செம குத்து குத்தி உள்ளனர்.

முதல் பாடலான மொசலு மொசலு பாடலை போலவே இந்த பாடலும் கேட்க நல்லாவே இருக்கு. ஹாரிஸ் ஜெயராஜ் ஐ எம் பேக் என மார்தட்டி சொல்லும் அளவுக்கு அருமையான பாடல் வரிகளுடன் பாடலை கொடுத்துள்ளார். விஷுவலாக பார்க்கும் போது ராய் லக்‌ஷ்மியின் நடனம் சர்ப்ரைஸாக ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. திருவிழா செட் மற்றும் சக நடனக் கலைஞர்கள் என அனைவருமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

நடிகை ராய் லக்‌ஷ்மியின் குத்தாட்டம் வேறலெவலில் பாடலுக்கு வலிமையை சேர்க்கிறது. செம கலர்புல்லாக இந்த பாடலையும் முடிந்த வரை ஹிட்டாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் மெனக்கெட்டு எடுத்துள்ளனர். இன்னும் அடுத்தடுத்த பாடல்களில் எல்லாம் எந்த எந்த நடிகைகள் வரப்போகின்றனர் என்றும் ஊர்வசி ரவுத்தேலாவை எப்ப அண்ணாச்சி காட்டுவீங்க என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செக்க செக்க செகப்பி என ராகவா லாரன்ஸ் வர்ணித்து பாடிய ராய் லக்க்ஷ்மியின் கலரே டல் ஆகும் அளவுக்கு மேக்கப்பில் குளித்து வந்தது போல அவ்வளவு டால் அடிக்கிறாரு லெஜண்ட் சரவணன். முடிந்த வரை கஷ்டப்பட்டு ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடி உள்ளார். ஆனால், அவரது நடனம் அந்த அளவுக்கு ரசிக்கும்படியாக இல்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

லிரிக் வீடியோவாக ரிலீஸ் செய்யாமல் முழு வீடியோ பாடலையும் இங்கேயே காட்டிட்டா அப்புறம் தியேட்டருக்கு எதை பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் இதையெல்லாம் காட்டலாமே? என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

ரிஷபம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 14 முதல் நவம்பர் 20 )- Rishabam Rasipalan. 

Molten Chocolate Lava Cakes Recipe #LavaCakes