Posts

Showing posts with the label #Flyover

திருடிவிட்டு மேம்பாலத்தில் தூக்கம்! – சிக்கியது எப்படி?571643765

Image
திருடிவிட்டு மேம்பாலத்தில் தூக்கம்! – சிக்கியது எப்படி? சென்னை மேடவாக்கத்தில் கடைகளில் திருடிவிட்டு குடிபோதையில் பாலத்தில் தூங்கியவரை கைது செய்த போலீசார் 5 கிலோ அல்வா 5 கிலோ முந்திரி திருடிவிட்டு தலைமறைவாக இருக்கும் மேலும், 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேடவாக்கத்தில் மொபைல் சேல்ஸ் கடையில் நேற்று செல்போன்கள் ஹெட்செட் சார்ஜர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் திருடு போனது. அதேபோல் அங்குள்ள சிப்ஸ் கடையிலும் ஆயிரம் ரூபாய் பணமும், 5 கிலோ முந்திரி மற்றும் 5 கிலோ அல்வா திருடு போனது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மேடவாக்கம் புதிய மேம்பாலத்தின் மேல் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வேளச்சேரி காந்தி ரோட்டில் சேர்ந்து ஆஜீத் என்பது தெரியவந்தது. அவரும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து திருட்டு வேலைகளில் ஈடுப்பட்டது தெரியவந்தது. திருடியபிறகு 3 பேரும் சேர்ந்து மதுகுடித்துள்ளனர். ஆஜீப் மட்டும் போதையில் பாலத்தில் தூங்கியதால் அவர் சிக்கினார். மேலும் அல்வா முந்திரிப்பருப்பு உடன் தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.