மக்கள் மனதில் இருந்து அழிக்கமுடியாத 5 திரைப்படங்கள்.!


மக்கள் மனதில் இருந்து அழிக்கமுடியாத 5 திரைப்படங்கள்.!


தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பல திரைப்படங்கள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் யாராலயும் அசைத்துப் பார்க்க முடியாத 5 திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

மறுபடியும்: இந்த திரைப்படத்தை பாலுமகேந்திரா இயக்கினார்.மேலும் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா  இசையமைத்துள்ளார் இந்த படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த்சாமி மற்றும் ரோகினி இவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தில் கணவன் இறந்தாலும் பெண்களால் வாழ முடியும் என்ற கதை என கூறப்படுகிறது.

marupadiyum
marupadiyum

வீடு : இந்த திரைப்படம் பாலுமகேந்திரா இயக்கத்தில் அர்ச்சனா நடிப்பில் வெளியான திரைப்படமாகும். இசையமைப்பாளராக இளையராஜா இசையமைத்துள்ளார்.  மேலும் இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கனவை பல பிரச்சினைகளைத் தாண்டி நிறைவேற்றுவது இந்த திரைப்படத்தின் கதையாகும்.

உதிரிப் பூக்கள்: 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படம் இயக்குனர் மகேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இளையராஜா இத்திரைப்படத்தில் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சரத்பாபு,அஸ்வினி  மற்றும் சுந்தர் விஜயன் இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் . இந்த திரைப்படத்தில் சில பெண்களின் வாழ்க்கை மோசமான ஆண்களால் எப்படி பாதுகாக்கிறது என்பதை இத்திரைப்படமாகும்.

Uthiri Pookka
Uthiri Pookkal

விதி: இந்த திரைப்படத்தை இயக்குனர் கே விஜயன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மோகன், பூர்ணிமா, ஜெயராம் போன்ற பல நடிகர்களால் உருவாக்கப்பட்ட படமாகும் சங்கர் கணேஷ் திரைப்படத்தில் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதை ஒரு இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியவனை கோர்ட்டில் ஏற்றி என் குழந்தைக்கு இவன்தான் தகப்பன் என்று நிரூபித்த திரைப்படமாகும் .

முதல் மரியாதை : இந்த திரைப்படம் இயக்குனர் பாரதிராஜா இயக்கி உள்ளார். மற்றும் சிவாஜி ,கணேசன், ராதா, வடிவுக்கரசி போன்ற பல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்துள்ளார் இந்த படத்தில் சிவாஜி கணேசனுக்கும் நடிகை ராதாவுக்கும் நட்பு மற்றும் காதலும் ஏற்படும் திரைப்படமாகும்.

Muthal Mariyathai
Muthal Mariyathai

Comments

Popular posts from this blog