தாயான 10ம் வகுப்பு மாணவி..! திருவொற்றியூரில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, ஆண் குழந்தை பிறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்குத் திருமணமாகி விட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் ஒரு மகளுடன் திருவொற்றியூருக்கு குடிபெயர்ந்த அவர்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், 10ம் வகுப்பு படித்து வந்த இவர்களின் மகளுக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவியின் தாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மாணவியின் இந்த நிலைக்கு யார் காரணம் எனப் பெற்றோர்கள் பலமுறை கேட்டுள்ளனர். அதற்கு அவரால் சரியாகப் பதில் கூற முடியவில்லை. பின், மாணவியின் தாய் மீண்டும், மீண்டும் விசாரித்தபோது, வீட்டில் தனியாக இருந்தபோது, சித்தியின் மகன் வீட்டிற்கு வந்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம...