தாயான 10ம் வகுப்பு மாணவி..!891565681
தாயான 10ம் வகுப்பு மாணவி..!
திருவொற்றியூரில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, ஆண் குழந்தை பிறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்குத் திருமணமாகி விட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் ஒரு மகளுடன் திருவொற்றியூருக்கு குடிபெயர்ந்த அவர்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், 10ம் வகுப்பு படித்து வந்த இவர்களின் மகளுக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவியின் தாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் இந்த நிலைக்கு யார் காரணம் எனப் பெற்றோர்கள் பலமுறை கேட்டுள்ளனர். அதற்கு அவரால் சரியாகப் பதில் கூற முடியவில்லை.
பின், மாணவியின் தாய் மீண்டும், மீண்டும் விசாரித்தபோது, வீட்டில் தனியாக இருந்தபோது, சித்தியின் மகன் வீட்டிற்கு வந்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகனைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், விஷயத்தை வெளியில் சொல்லாமல், மாணவியை பிரவத்திற்க்காக மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, சிறுமிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவரது கணவன் குறித்து மருத்துவ ஊழியர்கள் விவரங்களைக் கேட்டனர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பெண் காவலர் ஷீலாமேரி, மாணவி மற்றும் பெற்றோரிடம் தீவிரமாக விசாரானை நடத்தினார்.
அதில், மாணவிக்குக் குழந்தை பிறந்ததற்கு, 19 வயதான உறவுமுறை அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததுதான் காரணம் எனத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்குச் சென்று காவல்துறை சோதனை செய்தபோது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, மகளிர் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான உறவுமுறை அண்ணனை வலைவீசித் தேடி வருகின்றனர்.
மேலும், குழந்தை பெற்ற சிறுமி 10 மாத கர்ப்பமாக இருந்தபோது பெற்றோருக்கும் பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகளுக்கும் தெரியாமல் இருந்தது எப்படி என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Comments
Post a Comment