ஏப்ரல் 13ம் தேதி 5 மொழிகளில் `பீஸ்ட் ’ வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!


ஏப்ரல் 13ம் தேதி 5 மொழிகளில் `பீஸ்ட் ’ வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!



தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிஅர் விஜய். இவர் தற்போது  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருடன் நடிகை பூஜா ஹெக்டே யோகி பாபு, செல்வராகவன் உட்பட பல முண்ணனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


பீஸ்ட் படத்தின்  முதல் பாடலான 'அரபிக்குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.  அடுத்த பாடலாக  'ஜாலியோ ஜிம்கானா' பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது


இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. அவருடைய ரசிகர்கள் இப்போதே உற்சாக கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். 

 

Comments

Popular posts from this blog

ரிஷபம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 14 முதல் நவம்பர் 20 )- Rishabam Rasipalan. 

Molten Chocolate Lava Cakes Recipe #LavaCakes