ராஷ்மிகா மந்தனா இல்லையாம்.. சந்தோஷப்படாதீங்க.. தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?
ராஷ்மிகா மந்தனா இல்லையாம்.. சந்தோஷப்படாதீங்க.. தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?
இதுவரை கோலிவுட்டில் கலக்கி வந்த நடிகர் விஜய் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள பைலிங்குவல் படத்தில் நடிக்க உள்ளார். டோலிவுட் நடிகர்கள் இந்தி வரை மார்க்கெட் உயர்த்தி வரும் நிலையில்,, அதை நோக்கி நடைபோட தொடங்கி உள்ளார் விஜய்.
கார்த்தி, நாகர்ஜுனா நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் தான் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்கப் போகிறார். மகேஷ் பாபு நடித்திருந்த மகரிஷி படத்தையும் இயக்கியவர் இந்த இயக்குநர் தான். அந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் ஆரிஜின் எனும் கம்பெனிக்கு சிஇஓவாக இருக்கும் மகேஷ் பாபு, கல்லூரியில் இக்கட்டான நிலையில், தனக்கே தெரியாமல் உதவி செய்த தனது நண்பன் அல்லுரி நரேஷை சந்திக்க, பெரிய கார்ப்பரேட் முதலாளியின் சதித்திட்டத்தை எதிர்த்து தனியாளாக போராடும் நண்பனுக்காக களத்தில் இறங்குவது தான் கதை. அந்த படத்தையே விஜய்க்கு ரீமேக் செய்தாலும் சூப்பராக இருக்கும் என்றே ரசிகர்கள் விரும்பி வந்த நிலையில், வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் தாராளமாக தளபதி நடிக்கலாம் என எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆனால், இந்த படத்தில் பெரிய சிக்கலாக பேசப்பட்டு வரும் விஷயமே படத்தின் ஹீரோயின் போர்ஷன் பற்றித்தான். கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பார் என ஆரம்பத்தில் தகவல்கள் வந்தன. அதன் பின்னர் ராஷ்மிகா மந்தனா தான் கன்ஃபார்ம் என்றே சொல்லி விட்டனர்.
ஆனால், விஜய் ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவின் மற்ற பட நடிப்புகளை பார்த்து விட்டு நேஷ்னல் கிரஷ் ஆக இருந்தாலும் எங்களுக்கு நீ வேண்டாம்மா.. சுல்தான் படத்தில் பார்த்து பட்டதே போதும் என ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், ராஷ்மிகா இல்லை என்றும் ஏற்கனவே விஜய் உடன் ஜோடி போட்டு நடித்த ஒரு ஹீரோயின் என்றும் பேச்சுக்கள் கிளம்பி இருக்கின்றன.
ஏற்கனவே விஜய்யுடன் நடித்தவர் என்றால் சமந்தாவா, நயன்தாராவா இல்லை மாஸ்டர் மாளவிகா மோகனனா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், சுறா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த தமன்னா நடிக்கப் போவதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை மேலும், அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வம்சி இயக்கத்தில் வெளியான தோழா படத்தில் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை விஜய் ரசிகர்கள் பொறுமை காப்பது நல்லது.
Comments
Post a Comment