முதல்வர் மான் எடுத்த முடிவு! ஆம் ஆத்மி சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுகிறாரா ஹர்பஜன் சிங்?
முதல்வர் மான் எடுத்த முடிவு! ஆம் ஆத்மி சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுகிறாரா ஹர்பஜன் சிங்?
பகவந்த் மான்
இந்த நிலையில் பகவந்த் மானின் பதவியேற்பு விழா சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் காலனில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அடுத்த மாதம் பஞ்சாப் மாநிலத்தின் சார்பில் தற்போது உறுப்பினர்களாக ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது.
காலியாகும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி
அதையடுத்து காலியாக உள்ள அந்த இடங்களை ஆளும் தரப்பான ஆம் ஆத்மி நிரப்பவுள்ளது. அதில் ஒருவராக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படுவார் என்றே தெரிகிறது. முதல்வர் பகவந்த் மான் ஜலந்தரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கவுள்ளதாக உறுதி அளித்திருந்தார்.
விளையாட்டு பல்கலைக்கழகம்
அந்த பல்கலைக்கழகத்திற்கு பொறுப்பாளராக ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பஞ்சாபில் விளையாட்டை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் பகவந்த் மான் எடுக்கும் விதமாக ஹர்பஜன் சிங்கிற்கு எம்பி பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் கூறுகையில் மாநிலத்தில் ஆட்சி அமைந்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் புதிதாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள எனது நண்பர் பகவந்த் மானுக்கும் வாழ்த்துகள். பகத் சிங்கின் பூர்வீக கிராமத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளது சிறப்பானதாகும். இது நம் எல்லோருக்கும் பெருமையான தருணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment