ஐஸ்வர்யா ரஜினியின் ‘பயணி’ செம மியூசிக் வீடியோ!


ஐஸ்வர்யா ரஜினியின் ‘பயணி’ செம மியூசிக் வீடியோ!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிய நிலையில் தற்போது பயணி என்ற மியூசிக் வீடியோவை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் இயக்கியுள்ளார்.

இந்த மியூசிக் வீடியோவின் தமிழ் பதிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. ஜானி மாஸ்டர் மற்றும் ஸ்ரஷ்டி வர்மாவின் அழகிய காதல், ஹீரோ தனது அம்மாவிடம் காட்டும் அன்பு, துருதுருவென இருக்கும் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செதுக்கியிருப்பதாக தெரிகிறது.

மொத்தத்தில் இந்த மியூசிக் வீடியோ மூலம் மீண்டும் தான் ஒரு திறமையான இயக்குனர் என்பதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிரூபித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் பாடியுள்ள இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். இந்த மியூசிக் வீடியோவுக்கு அன்கிட் திவாரி இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Spread the love

Comments

Popular posts from this blog

Mouth Tape for Profound Health and Esthetic Benefits #Benefits

Wedding Flowers 40 Ideas to Use Baby rsquo s Breath

ராஷ்மிகா மந்தனா இல்லையாம்.. சந்தோஷப்படாதீங்க.. தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?