ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்
வேலூரில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் மகள் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறார் ( 13 வயது )நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி வீட்டில் உள்ள தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
Also Read:
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment