உங்க மனைவிக்கு இத பரிசா குடுங்க.. கடைசி காலத்தில் உதவும் பென்சன்!
உங்க மனைவிக்கு இத பரிசா குடுங்க.. கடைசி காலத்தில் உதவும் பென்சன்!
தேசிய பென்சன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவொரு முதலீடு சார்ந்த பென்சன் திட்டமாகும். கடைசிக் காலத்தில் இத்திட்டத்தின் மூலமாக ஒரு தொகை பென்சனாக வந்துகொண்டே இருக்கும்.
இப்போது உங்களுடைய மனைவிக்கு 30 வயது என்று வைத்துக்கொள்வோம். அவரது பெயரில் முதிர்வு காலம் வரை, அதாவது மொத்தம் 30 ஆண்டுகளுக்கு நீங்கள் சேமிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் 5000 ரூபாய் முதலீடு செய்தால் முதிர்வுக் காலத்தில் கையில் இருக்கும் பென்சன் தொகை ரூ.1,11,98,471.
8 சதவீத வட்டியில் வைத்துப் பார்த்தால் ரூ.67,19,083 ரிட்டன் கிடைக்கும். இதன்படி, உங்களுடைய மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.44,793 பென்சன் கிடைக்கும்.
ரயில் டிக்கெட் இனி கட்டாயம் கிடைக்கும்.. பயணிகளுக்கு சூப்பர் வசதி!!
18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒருவரது பெயரில் நிறைய கணக்குகள் தொடங்க முடியாது. உங்களுடைய மனைவியின் பெயரில் நீங்கள் கணக்கு தொடங்கி அவர்களுக்காக நீங்கள் பணத்தைப் போடலாம்.
Comments
Post a Comment