இன்று 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை


இன்று 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை


இன்று 17 மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் சென்னையில் சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கரூர்ஆகிய 17 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது பொது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

Comments

Popular posts from this blog