ஆற்றில் கவிழ்ந்த சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் கார்...அச்சச்சோ...அப்புறம் என்னாச்சு ?


ஆற்றில் கவிழ்ந்த சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் கார்...அச்சச்சோ...அப்புறம் என்னாச்சு ?


குஷி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கலர்ஃபுல்லாக அமைக்கப்பட்டிருந்த இந்த போஸ்டர், விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியின் க்யூட்னஸ் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடந்து வருகிறது.

காஷ்மீரின் கடும் குளிரிலும் சமந்தா ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள், ஊரை சுற்றி பார்த்த போது தானே போட்டோகிராஃபராக மாறி, எடுத்த போட்டோக்கள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார் சமந்தா. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் நடிக்க சமந்தா நோ சொன்ன தகவலும் சமீபத்தில் வெளியானது. சமந்தாவும், விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதால் காஷ்மீரில் எடுத்துக் கொண்ட பல போட்டோக்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.

சமீபத்தில் குஷி பட ஷுட்டிங்கின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரும் காயமடைந்த தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு கடினமான ஸ்டன்ட் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இரு புறமும் கயிறு கட்டப்பட்ட பாலத்தில், Lidder ஆற்றின் மேல் காரில் இருவரும் பயணம் செய்யும் சீன் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக கார், ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. உடனடியாக இருவரும் காப்பாற்றப்பட்டு விட்டனர். ஆனால் இருவருக்கும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் தான் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை அங்கு ஷுட்டிங் எடுக்கப்பட்ட போது இருவருமே முதுகு வலியால் கடுமையாக தவித்துள்ளனர். இதனால் உடனடியாக இருவரும் ஓட்டல் ரூமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடனேயே இந்த ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஷுட்டிங்கை முடித்து விட்டு படக்குழு, நேற்று பிற்பகலில் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

படம் எப்போ ரிலீஸ்

குஷி படம் இந்த ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மகாநதி படத்திற்கு பிறகு சமந்தா - விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.

Comments

Popular posts from this blog