Monkey measles spread again!
மீண்டும் பரவியது குரங்கு அம்மை நோய்! மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவி இருக்கலாம்.
கனடாவின் கியூபெக் பிராவினஅஸ்-இல் சுகாதார ஊழியர்கள் குரங்கு அம்மை பாதிப்பு பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 20-க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கனடா நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த குரங்கு அம்மை என்பது அரிய மற்றும் அபாயகரமான வைரஸ் பாதிப்பு ஆகும்.
அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் மூலம் பாதிக்கப்பட்ட நபர் கனடாவில் இருந்து அமெரிக்கா பயணித்தவர் என கூறப்படுகிறது. பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவி இருக்கலாம் என கூறப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி இருக்கிறது. இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:
முதலில் சாதாரண காய்ச்சல், தசை வலியாக தொடங்கி அதன் பின் அம்மை போன்ற வெடிப்புகள் தோன்றுவது இந்த குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறிகள் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
கியூபெக்கின் மாண்ட்ரியல் பகுதியில் சுமார் 13 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. இவை பற்றிய அறிக்கை வரும் நாட்கள் வெளியாக இருக்கிறது.
எளிதில் பரவும்:
அமெரிக்காவின் மசாசூட்ஸ் சுகாதார அதிகாரிகள் அந்நாட்டில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த நோய் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் இடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களில் உள்ள கிருமிகள் மற்றவர்களுக்கும் இந்த பாதிப்பை பரவச் செய்யும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Comments
Post a Comment