zomato: 3600 கிலோ கெட்டுப்போன இறைச்சி.. கையும் களவுமாக சிக்கியது சோமேட்டோ!
zomato: 3600 கிலோ கெட்டுப்போன இறைச்சி.. கையும் களவுமாக சிக்கியது சோமேட்டோ!
சோமேட்டோ நிறுவனம் கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில் இருந்து இறைச்சியை வாங்கியதாக கூறப்படுகிறது. அதனை ப்ரீசர் வசதி கொண்ட லாரியில் இறைச்சி பண்டல்கள் ஒரத்தநாடு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவற்றை எடுத்து சமைத்த ஆர்.ஆர்.பிரியாணி உணவக ஊழியர்கள் இறைச்சி கேட்டுப்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீதமிருந்த இறைச்சிகளை கொண்டு வந்து சென்னை கிண்டியில் உள்ள ஆர்.ஆர்.பிரியாணி உணவகத்தின் கிடங்கில் வைத்துள்ளனர். பின்னர், உணவு பாதுகாப்புத்துறையிடம் ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் புகார் அளித்தார்.
பெட்ரோல் விலை; தமிழிசை வைத்த கோரிக்கை!
புகாரின் அடிப்படையில் கிண்டி கிடங்கிற்கு வந்த அதிகாரிகள் இறைச்சியை பரிசோதனை செய்தனர். அதில், அனைத்து இறைச்சி பாக்கெட்டுகளும் கெட்டுப்போனது தெரியவந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கூறியதாவது:-
”குடோனில் இருந்த இறைச்சியை நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். அவை கெட்டுப் போய் உள்ளது. ப்ரீசர் வாகனத்தில் இறைச்சி வந்ததாக கூறுகின்றனர். ஆனாலும், இவை ஏறக்குறைய அழுகிய நிலையில் உள்ளது. கெட்டுப்போன நிலையில் இருந்த இறைச்சியை தான் சோமேட்டோ நிறுவனம் சப்ளை செய்திருக்கும் என நினைக்கிறேன்.
மேலும், ஆய்வு செய்ய இறைச்சிகளை சோதனை கூடம் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பவுள்ளோம். இந்த சம்பவத்திற்கு சோமேட்டோ நிறுவனம் பதில் சொல்லனும். இதனை தீவிரமாக விசாரிக்கப்போகிறோம். கர்நாடகா மாநிலத்திற்கு சென்றும் விசாரணை நடத்தப்படும்” இவ்வாறு கூறினார்.
Comments
Post a Comment