விஜய்யா இது...செம ஸ்மார்ட்டா இருக்காரே...இணையத்தை தெறிவிக்க விடும் ரசிகர்கள் ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட தளபதி 66 ஷுட்டிங், சென்னையில் ஓரிரு நாட்கள் முதல் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்றது. ஐதராபாத் ஷுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த போது அங்கிருந்த ஒருவர் விஜய்யின் வீடியோவை எடுத்து, சோஷியல் மீடியாவில் பரவ விட்டு, டிரெண்டிங் ஆக்கினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்யின் லேட்டஸ்ட் லுக் போட்டோவை பிரகாஷ் ராஜ் நேற்று சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். இதுவும் வைரலானது. இதைத் தொடர்ந்து தளபதி 66 படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் சிலவருடன் விஜய் எடுத்துக் கொண்ட போட்டோவும் வெளியாகி இணையத்தை கலக்கியது. தளபதி 66 படத்தின் மொத்த ஷுட்டிங்கையும் ஐதராபாத்தில் நடத்தவே படக்குழு முதலில் முடிவு செய்திருந்ததாம். ஆனால் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பை சென்னைக்கு மாற்ற விஜய் கேட்டுக் கொ...
Comments
Post a Comment