தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது- முழு ரிசல்ட் இங்கே பார்க்கலாம்!


தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது- முழு ரிசல்ட் இங்கே பார்க்கலாம்!


சென்னை: தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

தமிழக அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு படிநிலையாக பிரித்து அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்துகிறது.

குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளில் மொத்தம் 5413 காலி இடங்கள் இருந்தன. இதற்கான தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. இதனடிப்படையில் கடந்த மே மாதம் 21-ந் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன.

 

இத்தேர்வுக்கு மொத்தம் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 11,78,000 பேர். அதேநேரத்தில் மொத்தம் 9.94 லட்சம் பேர் தேர்வும் எழுதினர். அதாவது சுமார் 5,000 பதவி இடங்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வில் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

 

தற்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து குரூப் 2, குரூப்2ஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

 

முன்னதாக குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பான பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக கடந்த வாரம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கிடையில் மகளிருக்கான இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

தற்போது குரூப்2 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதனைத் தொடர்ந்து குரூப்2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

 

Comments

Popular posts from this blog