Posts

புரமோஷனுக்கு ஏன் வேஸ்ட்டா செலவு செய்யணும்.. நம்பர் நடிகை எடுத்த திடீர் முடிவு.. என்ன ஆகப்போகுதோ?

Image
நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் சினிமா நடிகர்கள் ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதால் தான் பெரிய அளவில் கூட இல்லை போட்ட முதல் கூட பிசினஸ் ஆகாத சூழல் உருவாகி வருவதாக பல தயாரிப்பாளர்கள் தலையால் அடித்துக் கொள்கின்றனர். ஆனால், இங்கே விஷயமே வேறு. இயக்குநருக்கும் நடிகைக்கும் இது சொந்த தயாரிப்பு படம் என்பதால் நிச்சயம் பெரிய அளவில் புரமோஷன் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இரு பெரும் ஹீரோயின்கள் மற்றும் திறமையான நடிகர் என ஸ்டார் காஸ்ட்டே பயங்கரமாக உள்ள நிலையில், படத்தை பெரிய அளவில் புரமோஷன் செய்தால், முதல் நாளிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டருக்கு திரட்டி விடலாம். இப்போதெல்லாம், படத்தின் அவுட் புட் தெரிந்து விட்டால் பெரிய அளவில் பணத்தை செலவு செய்து புரமோஷன்... விரிவாக படிக்க >>

தமிழக மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி கிடைக்க உதவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

Image
தமிழக மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி கிடைக்க உதவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.! சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ஒடிசாவில் உள்ள தல்சர் சுரங்கங்களில் இருந்து போதுமான நிலக்கரி தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானதென்றும், தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும்

அதிமுகவை ஜனநாயக முறைப்படி மீட்டெடுப்போம் - டிடிவி தினகரன்

Image
அதிமுகவை ஜனநாயக முறைப்படி மீட்டெடுப்போம் - டிடிவி தினகரன் அதிமுகவை ஜனநாயக முறைப்படி மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.  மேலும், அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டம் தொடரும் எனக் கூறிய டிடிவி தினகரன், அதிமுகவை மீட்டு சசிகலாவை அதன் பொதுச் செயலாளராக ஆக்குவோம் எனவும் கூறினார். சசிகலாவிற்கும், தமக்கும் மோதல் எனக் கூறப்படும் விவகாரம் கற்பனை என்றார். 

மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க போதிய உதவி இல்லை என வீரர்கள் குற்றச்சாட்டு

Image
மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க போதிய உதவி இல்லை என வீரர்கள் குற்றச்சாட்டு மாற்று திறனாளிகளுக்கான தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற மாற்று திறனாளி வீரர்களுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாடு பாராலிம்பிக் அமைப்பு மாநில அளவிலான போட்டிகளை நடத்தி தேசிய போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் 37 வீரர்கள் தேசிய போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்றனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் தமிழ்நாட்டு அணி 13 தங்கம், 18 வெள்ளி, ஆறு வெண்கலம் என 37 பதக்கங்கள் வென்று 5 வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 44 பதக்கங்கள் வென்று 3 வது இடத்தை பிடித்திருந்தது. போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பயண செலவு, பதிவு கட்டணம் ஆகியவை வழங்கப்படவில்லை என போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையை சேர்ந்த ஞானபாரதி தேசிய போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட அவர் தன் சொந்த செலவிலேயே போட்டிகளில் கலந

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்!

Image
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்! Home » » tamil-nadu தமிழ்நாடு 15:08 PM April 22, 2022 Web Desk Tamil சிறப்பு காணொளி up next கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்! 2-வது நாளாக அறிவிக்கப்படாத மின்வெட்டு - மக்கள் அவதி! ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலங்கியது! தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தேர்வான, சென்னை தமிழ் பெண்! சசிகலாவிடம் விசாரணை குறித்து அதிமுக புகழேந்தி கருத்து துப்பாக்கியை காட்டி, சுங்கச்சாவடி ஊழியர்கள் மிரட்டல் - வெளியான வீடியோ பள்ளி மாணவியிடம் 63 வயது முதியவர் சில்மிஷம் - போக்ஸோவில் சிக்கினார்! பேருந்து பயணிகளிடம் செல்ஃபோன் பறித்த இருவர் சிக்கினர்! சென்னை ஐஐடி வளாகத்தில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!