தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை!! தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் அரசு மற்றும் பொதுவிடுமுறை தவிர்த்து உள்ளூர் விழாக்கள் , பண்டிகைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் வழக்கம் உண்டு. அந்த வகையில் நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாளை ஆகஸ்ட் 3ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 3ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுள் ஒருவர் தியாகி தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர், ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்துவது துளியும் விரும்பாததால் அவர்களை எதிர்க்க தொடங்கினார். பல போராட்டங்களில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்தார். இவர் திப்பு சுல்தானின் வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்தார். பிறகு பிரிட்டிஷாரால் தீரன் சின்னமலை தூக்...